Skip to main content

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

Pastor George Ponnaya's bail plea dismissed

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து கடவுள்களையும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாக பேசியதாக கிறிஸ்தவ மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா என்பவர் மீது 7 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தேடி வந்த நிலையில், மதுரையில் மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா கடந்த 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 

 

கடந்த 18ஆம் தேதி சிறுபான்மையினர் உரிமை மீட்பு என்ற பெயரில் அருமனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து கடவுள்கள், பிரதமர், தமிழ்நாடு அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை ஜார்ஜ் பொன்னையா விமர்சித்துப் பேசிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் குழித்துறை நீதிமன்றத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நீதிமன்றம் தற்பொழுது தள்ளுபடி செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்