Skip to main content

உரிய பாஸ்போர்ட், விசா இல்லாத நான்கு பேர் ஈரோட்டில் கைது...

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

 

குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் வருகிற ஆபத்துகள் ஒருபுறம் இருக்க வயிற்றுப் பிழைப்புக்காக தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள், நேபாளம், மணிப்பூர், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து வந்து கூலி வேலை செய்யும் ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தின் பல நகரங்களில் தங்கியுள்ளார்கள். 

 

erode



குறிப்பாக ஜவுளி மற்றும் தொழில் நகரான கோவை, திருப்பூர், பெருந்துறை போன்ற ஊர்களில் பலர் குடும்பம் குடும்பமாக வசிக்கிறார்கள். இவர்களில் பலர் பாஸ்போட், விசா என எதுவும் இல்லாமல் தான் இங்கு வந்து கூலி வேலை செய்கிறார்கள்.
 

அப்படிப்பட்ட இந்திய குடியுரிமை இல்லாதவர்களை தீவிரமாக கண்டறியச் சொல்லி தமிழக அரசு உளவுத் துறை போலீசாருக்கு சமீபத்தில் ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் முதலில் மாட்டியவர்கள் தான் இப்போது ஈரோட்டில் பிடிபட்டவர்கள்.


 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம்பாளையம் புதூர், மாகாளியம்மன் கோவில் அருகில், நேற்று காலை பெருந்துறை காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், வாகன தணிக்கை செய்துக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வேலைக்கு செல்வதற்காக நடந்து வந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். 

நால்வரும் இந்தியில் பேசியதோடு அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும், அவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற எந்த ஆவணமும் இல்லாமல்  இங்கு  தங்கி இருப்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். இந்த நான்கு  பேரும், பெருந்துறை, திருவேங்கிடம்பாளையம் புதூரில் தங்கிக் கொண்டு, பெருந்துறை, சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததையும் கூறியிருக்கிறார்கள். இதை போலீசாரும் அந்த தொழில் நிறுவனத்திற்குச் சென்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.


 

விசாரணையில் வங்கதேசத்தில் உள்ள சத்கிரா மாவட்டம், சோபர்னாபாத், கோபுரஹலி பகுதியை சேர்த்த அபுபெக்கர் சித்திக் ஹாஜி என்பவரது  மகன் பரூக் ஹாஜி, பேட்ஹலி, பிங்கர ஹள்ளி கிராமம், சோனத் ஹாஜியின் மகன் ஹிமுல் இஸ்லாம், டேப்ஹலி கிராமம், பொரேஸ் காஜி மகன் சிராஜ் ஹாஜி மற்றும் நங்களா மனரடி கிராமம், முகமது சஜான் சர்தாரின் மகன் ரொபுயுல் இஸ்லாம்  என்பது தெரிய வந்தது.
 

அதன் பிறகு இந்த நால்வரையும் பாஸ்போட், விசாவோ இல்லாத காரனத்தினால் சட்டவிரோதமாக இங்கு வந்து தங்கியதாக வழக்கு பதிவு செய்து பெருந்துறை காவல் ஆய்வாளர் சரவணன் கைது செய்ததோடு நால்வரையும் சென்னை கொண்டு சென்று புழல் சிறைக்கு அடைத்து விட்டனர்.
 

வங்கதேச எல்லையில் உள்ளவர்களின் உறவினர்கள் இந்தியாவின் மேற்கு வங்க எல்லையில் வசித்து வருகிறார்கள். அந்த எல்லைப் பகுதியில் வருவதும் போவதும் வழக்கமான நடைமுறை தான். அங்கு தொழில் இல்லாததாலும் குடும்பம் நடத்தும் அளவுக்கு கூலி கிடைக்காததாலும் ஏராளமானோர் வறுமை காரணமாக எல்லோருக்கும் வேலை கிடைக்கும் தமிழகத்தை தேடி வருவதாகவும் இங்கு நல்ல கூலி கிடைக்கிறது என்றும் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.