கரோனா பரவல் காரணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களும் இன்று முதல் தங்களுடைய சேவையை நிறுத்தி வைத்துள்ளது. இன்று முதல் பாஸ்போர்ட் அலுவலகங்களில் எந்தவித பணிகளும் செயல்படாது என்றும், பாஸ்போர்ட் விண்ணப்பித்த அனைவருக்கும் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் மே 14ஆம் தேதிவரை மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் இன்று மூடப்பட்டுள்ளது. எனவே பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, காவல்துறை சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு இலவச தொலைபேசி எண்கள் 1800-258-1800, 0431-2707203, 2707404, உள்ளிட்ட எண்கள் மூலம் தொடர்பு கொள்ளவும், 7598507203 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் தகவல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.