Passengers suffering at Srivaikunda railway station- 13 buses ready; Railway information

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் மீதமுள்ள 530 பயணிகளுக்கு உணவு வழங்க மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்ற நிலையி மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisment

இரண்டு டன் உணவு, தண்ணீருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு வழங்க முடியாத சூழலும் ஏற்பட்டது. இதனால் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள 530 பயணிகளை மீட்க முடியாமல் திரும்பி சென்றது.ரயில் நிலையத்தில் ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ள நிலையில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் மூன்றாவது நாளாக 530 பயணிகள் தவித்து வருகின்றனர். தொடர்ந்து பயணிகளை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் ரயில் பயணிகள் உடனடியாக இன்றைய தினம் மீட்கப்பட்ட பிறகு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து 13 பேருந்துகள் மூலம் வெளியேற்றுவதற்கு ஏதுவாக ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இருக்கிறது. அங்கிருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாஞ்சி மணியாச்சி பகுதிக்கு சென்று செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அங்குகிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில் மூலம் இன்று மாலையே பயணிகள் அனுப்பி வைக்கப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment