bus

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஐ.செந்தில்குமார் தினசரி தனது தொகுதிக்கு அந்தந்த பகுதி மக்களிடம் குறைகளையும். கோரிக்கைகளையும் கேட்டு அதை நிறைவேற்றி வருவது வழக்கம்.

அதுபோல் இன்று பழனி தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானலில் உள்ள கீழ் மலை பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு விட்டு அப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு ஆடலூர் வழியாக எம்.எல்.ஏ. செந்தில்குமார் வந்து கொண்டு இருக்கும் போது திண்டுக்கல்லில் இருந்து ஆடலூர் நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு நடுவழியில் பழுதடைந்து அதில் வந்த பயணிகளும் நடு ரோட்டில் நின்று தவித்து வந்தனர். அதை கண்டு உடனே எம்.எல்.ஏ. செந்தில்குமார் தனது காரை விட்டு இறங்கி பயணிகளிடம் எவ்வளவு நேரமாக நிற்கிறீர்கள்? ஏன் மாற்று ஏற்பாடு செய்யவில்லை என டிரைவரிடம் கேட்டு விட்டு உடனே தனது செல் மூலம் திண்டுக்கல்லில் உள்ள அரசு டெப்போவுக்கு போன் செய்து மாற்று பஸ் வர வழி செய்தார் அதை கண்டு பஸ் பயணிகள் எம்.எல்.ஏ. ஐ.செந்தில்குமாருக்கு நன்றி தெரிவித்தனர்.