Advertisment

ஏசி வேலை செய்யாததால் பயணிகள் மயக்கம்; அறந்தாங்கியில் நிறுத்தப்பட்ட ரயில்

செங்கோட்டையில் இருந்து காரைக்குடி, அறந்தாங்கி, திருவாரூர் வழியாகச்சென்னை செல்லும் ரயிலில் ஏசி பெட்டியிலிருந்த பயணிகள், ஏசி சரியாக வேலை செய்யாததால் அனைவரும் மயக்கம் வருவதாகச் சொன்னதால் இரவு 10 மணிக்கு அறந்தாங்கி ரயில் நிலையத்தில் ரயில்அவசரமாக நிறுத்தப்பட்டது. உடனே ரயில்வே ஊழியர்கள் சென்று பார்த்தபோது,ஏசியிலிருந்துகுறைந்த அளவே குளிர் வெளியானது தெரியவந்தது. அதை இங்கு சரிசெய்ய முடியாது. திருவாரூரில் இதற்கான பணியாளர்களைத்தயாராக இருக்கச் சொல்லி இருக்கிறோம் என்று ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தங்களால் அந்தப் பெட்டியில் அமர்ந்து பயணிக்க முடியாது என்றுபயணிகள் கூறியுள்ளனர்.

Advertisment

சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக, அதிகமான சத்தத்துடன் ஹாரன் அடித்ததும் பயணிகள் ரயிலில் ஏறிய நிலையில், ஏசி சரி செய்யப்படாமலேயே மீண்டும் ரயில் திருவாரூர் நோக்கிப்புறப்பட்டது. இதனால் தொடர்ந்து பயணிகள் கூச்சலிட்டுக் கொண்டே சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

படங்கள்: பகத்சிங், அருண்குமார்

aranthangi Pudukottai Train
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe