Advertisment

“பாசஞ்சர் ரயில்களை இயக்க வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும்”- ஜனநாயக வாலிபர் சங்கம் எச்சரிக்கை!

Passenger trains must run, if no struggle will take place

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வாலிடம், மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால், அனைத்து ரயில்களும் இயக்கப்படாமல் சிறப்பு ரயில் என்ற பெயரில் குறிப்பிட்ட ரயில்கள் கூடுதல் கட்டணங்களுடன் இயக்கப்படுகிறது.

Advertisment

பெரும்பான்மையான விரைவு ரயில்கள் மட்டும் இயக்கப்படுவதால் பல கிராமப் பகுதிகளில் இருந்து வரக்கூடிய பொதுமக்கள் தங்களுடைய வணிக தேவைக்காகவும், தொழில் நிமித்தமாக பேசஞ்சர் ரயில்களைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது சாதாரண பாசஞ்சர் ரயில்கள் இன்னும் இயக்கப்படாமல் இருப்பதால் பலர் தொழில் நிமித்தமாக மற்ற ஊர்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாசஞ்சர் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், பயணிகளைத்திரட்டி அடுத்த கட்டமாகப் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

dyfi passengers railway struggle
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe