Advertisment

'பாசஞ்சர் ரயிலில் தீ விபத்து'-திருச்சியில் பரபரப்பு

 Passenger train fire in trichy

திருச்சியில் பாசஞ்சர்ரயிலில் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

Advertisment

திருச்சியில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர் வழியாக காரைக்கால் செல்லும் 0688 என்ற எண் கொண்ட பாசஞ்சர் ரயில் இன்று காலை 8:25 மணிக்கு புறப்பட்டு சுமார் 9 மணி அளவில் திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்பொழுது திடீரென என்ஜினில் இருந்து கரும் புகை வெளியேற ஆரம்பித்தது.

Advertisment

கரும் புகை அதிகமாக வெளியேறியது அங்கிருந்த பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. என்ஜின் பகுதியில் தீப்பிடித்ததை அறிந்தஓட்டுநர் உடனடியாக என்ஜின் பகுதியில் இருந்துவெளியே இறங்கியதோடு ரயிலில் இருந்த மற்ற பயணிகளை வெளியேறும்படி கூச்சலிட்டார். அதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் வெளியேறினர். பாசஞ்சர் ரயில் இருந்து இறக்கப்பட்ட பயணிகள் அனைவரும் அதேவழியாக வந்த வேளாங்கண்ணி சிறப்பு ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். ரயில் என்ஜின் பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது தொடர்பாக ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.

Train trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe