/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3945.jpg)
துறையூர் அருகே முகம் சிதைக்கப்பட்டு, கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகே உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியினர் துறையூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த நபருக்கு 40 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது. முகம் முழுவதும் சிதைந்த நிலையில் உயிரிழந்த நபரின் உடலை குற்றவாளிகள் பாலத்தின் மேற்புறம் இருந்து தூக்கி வீசி சென்றிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்தவர் யார் என்பது குறித்த விபரம் உடனடியாக தெரியவில்லை இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர் இளைஞர் கொலை செய்து ஆற்றுப் பாலத்தில் வீசிச் சென்ற மர்ம நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)