Advertisment

காவலாளியை கொன்று கால்களை கட்டி தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்

passed away the guard and hanging him with his legs tied

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்திருக்கிறார். வழக்கம் போல் கடந்த ஞாயிறு இரவும் பரமசிவம் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை), அதிகாலை பேரூராட்சி அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பரமசிவம் சடலமாக இருந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பரமசிவம், யாரால் எதற்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். இதனிடையே உயிரிழந்தவரின் உறவினர்கள் கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisment

காவல்துறையினர், சாலை மறியல் செய்தவர்களிடம் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பேரூராட்சி அலுவலக காவலாளி மர்மமான முறையில் தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe