57 மாத சம்பளத்தை உடனே வழங்குக; பாசிக் தொழிலாளர்கள் பட்டை நாம போராட்டம்!

புதுச்சேரியிலுள்ள பாசிக் நிறுவனத்தில் 350 நிரந்தர ஊழியர்கள், 190 தினக்கூலி ஊழியர்கள் எனமொத்தம் 540 பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு கடந்த 57 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அனைத்து ஊழியர்களுக்கும்உடனடியாக சம்பளம் வழங்கவேண்டும்,லாபகரமான தொழில்களை பாசிக் நிறுவனம் தொடர்ந்து நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம்(ஏ.ஐ.டி.யூ.சி)சார்பில் கடந்த 26-ஆம் தேதி முதல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

PASIK  Workers protest

தட்டாஞ்சாவடி வேளாண் வளாகத்தில் உள்ளபாசிக் நிறுவன தலைமை அலுவலகம் எதிரில் திரண்ட நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் முழு சம்பளம் வழங்க வேண்டும், நிலுவை சம்பளத்தை அளிக்க வேண்டும், தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்தினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும் ஒரு மணி நேரம் தொடர் தர்ணா நடத்திய தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

PASIK  Workers protest

ஆனால் கோரிக்கைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் 12-ஆவது நாளான நேற்று நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சட்டமன்றம் முன்பு பட்டை நாமம் அணிந்து போராட்டம் நடத்தினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

protest Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe