’காட்டிக்கொடுப்பார் என்ற பயத்தால்  கட்சி பதவி’  - துரைமுருகன் 

dam

ஈரோட்டில் நடைபெறும் மதிமுக மாநில மாநாட்டில் திமுக பொருளாளர் துரைமுருகன் பங்கேற்றுப்பேசினார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’யாரையாவது காட்டிக்கொடுப்பார் என்ற பயத்தால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது’’என்று தெரிவித்தார்.

அவர் மேலும், ‘’ மின் தடையே இருக்காது என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். ஆனால், முதல்வர் நிலக்கரி கேட்டு கடிதம் எழுதுகிறார். அமைச்சர்கள் அமர்ந்து நாட்டின் நிலைமையை பேசி பின்னர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’’என்றார்.

இலங்கை இறுதிப்போரில் இந்தியா உதவியதாக ராஜபக்சே கூறியிருப்பது குறித்து தனக்கு தெரியாது என்றும், 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பவில்லை என சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

duraimurugan
இதையும் படியுங்கள்
Subscribe