Advertisment

கட்சி பெயர், கொடி அறிவிப்பு? பேட்ட ஆடியோ ரிலீஸில் பட்டைய கிளப்பப்போகும் ரஜினி...!!!

Rajini Plan

Advertisment

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'பேட்ட' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஞாயிறு மாலை 6.30 மணிக்கு சென்னை தாம்பரம் அடுத்த சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது சன் டி.வி. இதனால் வேறு எந்த தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிகழ்ச்சியில் ரஜினி தனது கட்சி பெயரை அறிவித்து, கொடியை அறிமுகப்படுத்த உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment

தனது பிறந்த நாள் அன்று கட்சியின் பெயரை அறிவித்து, கொடியை அறிமுகப்படுத்த நினைத்திருந்த அவர் திடீரென அந்த முடிவை தள்ளி வைத்தார்.

இந்த நிலையில், சென்னை திருவான்மியூர் அடுத்த பாம்பன் சுவாமியின் ஆசிரமத்தைச் சேர்ந்த நாராயண ஐயங்கார் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களுடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார்.

Rajini petta

அப்போது, ''9ஆம் தேதி நல்ல நாள். அன்றைய தினம் கட்சி பெயரை அறிவித்தால் நன்றாக இருக்கும். அடுத்த நாள் 10ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கும், நட்சத்திரத்துக்கும் அவ்வளவாக நன்றாக இல்லை. நீங்கள் விரும்பியப்படியே நியூமராலஜி பார்த்துவிட்டோம். ஆகையால் 9ஆம் தேதி அறிவித்தால் நன்றாக இருக்கும்'' என்று கூறியுள்ளனர்.

கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது, கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது, இந்த நிலையில் நம்ம நல்ல நேரம், பேட்ட ஆடியோ ரிலீஸ் பிரம்மாண்டமாக நடக்கிறது, இதிலேயே கட்சிப் பெயரை அறிவித்துவிடலாம் என்று ரஜினியின் முக்கிய ஆலோசகர்களும், குடும்பத்தினரும் வலியுறுத்தியுள்ளார்களாம்.

ஆடியோ ரிலீஸ்க்கு வீட்டிலிருந்து புறப்படும் முன்பு இந்த அறிவிப்பை வெளியிடுவாரா? ஞாயிறு மாலை 4.30 மணியில் இருந்து 6 மணி வரை ராகுகாலம் என்பதால், 6 மணிக்கு மேல் பிரமாண்ட விழாவில் கட்சிப் பெயரை அறிவிப்பாரா இல்லை டிசம்பர் 12 பிறந்த நாள் அன்றுதான் அறிவிப்பார் என்று ரசிகர்களிடையே பெரிய விவாதம் தொடங்கியிருக்கிறது...

Announcement flag name party petta rajini
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe