Advertisment

கட்சி பொறுப்பாளர்களை குஷிப் படுத்தும் எம்.பி.

mp

Advertisment

கரூர் பாராளுமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான தம்பிதுரை கடந்த நான்கு ஆண்டுகாலமாக தொகுதி பக்கமும் சரிவர வருவதில்லை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு 2019 ல் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் கட்சி பொறுப்பாளர்களை இப்பவே சரி பண்ணி குஷி படுத்தி வருகிறார்.

அதாவது இந்த பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடசந்தூர் தொகுதியில் உள்ள வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை ஒன்றிய செயலாளர்களான சுப்பிரமணி, மலர்மண்ணன், லட்சுமணன் மற்றும் நகர செயலாளர்கள் பாலசுப்பிரமணி, மணி, பெருமாள், குமார், அறிவாழி உள்பட எட்டு பொறுப்பாளர்களும் இத் தொகுதி எம்.எல்.ஏ.வான டாக்டர் பரமசிவம் தலைமையில் டெல்லி உள்பட சில இடங்களை சுற்றிப்பார்க்க விமானத்தில் அழைத்து சென்றதின் பேரில் பொறுப்பாளர்களும் குஷியாக இருந்து வருகிறார்கள்.

mp22

Advertisment

இப்படி கட்சி பொறுப்பாளர்கள் விமானத்தில் இருப்பது போலவும் மற்ற இடங்களில் நின்னு எடுத்துக் கொண்ட போட்டோக்கள் வாட்சப், பேஸ்புக் மூலம் தொகுதியில் வளம் வந்து கொண்டு இருப்பதை கண்டு கட்சிக் காரர்கள் சிலரிடம் கேட்டபோது... அது ஒன்னும் இல்லைங்க... எம்.பி. தேர்தல் வர இருப்பதால் கட்சி பொறுப்பாளர்களை குஷிப் படுத்தி தன் பக்கம் எம்.பி. வைத்து கொள்ள முடிவு செய்து அந்த பொறுப்பை எங்க எம்.எல்.ஏ விடம் ஒப்படைத்து இருக்கிறார். அதனால தான் அவர்களை எம்எல்ஏ சுற்றுலா கூட்டி கிட்டு போய் சுற்றி காண்பித்து வருகிறார். இது போல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐந்து தொகுதிகளில் இருக்க கூடிய கட்சி பொறுப்பாளர்களும் அந்தந்த எம்.எல்.ஏ. தலைமையில் சுற்றுலா போல் டூர் போக இருக்கிறார்கள் என்றனர்.

MP
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe