Advertisment

‘இருக்கின்ற கட்சியிலே இருக்கின்ற மேடையிலேயே...’ - நடுரோட்டில் வேட்டியை மாற்றி கட்சித் தாவல்

party jump in the middle; AIADMK administrator who replaced Vetti

அண்மையில் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் அதிமுகவில் செயல்படாதவர்கள் எந்தக் கட்சியிலும் இணையலாம் என அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரம் ஏமாப்பூர் ஊராட்சியில், பாஜகவினர் சிலரின் முன்னிலையில் அதிமுகவின் கிளைக் கழகத்துணைச் செயலாளர் நடு ரோட்டிலேயே நின்றபடி செய்த செயல் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

அந்த வீடியோ காட்சியில் அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்ட நபர், ''அதிமுக புடிக்கல. செயல்பாடு சரியில்ல. அதனால அதிமுக வேட்டிய கழட்டிட்டு பிஜேபி வேட்டியை கட்டுறேன். பாஜகவின் மாவட்ட செயலாளரின் செயல்பாடு நல்லா இருக்கிறது. அவர் தலைமையில் சேர்வதற்கு பெருமைப்படுகிறேன். பாஜக வாழ்க.. பாரத் மாதாகீ ஜே...'' எனப் பேசும் அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisment
admk villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe