'Parting with AR Rakhuman'- Saira Banu announced the shocking decision

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

Advertisment

ஏற்கனவே திரையுலகில் அண்மையில் தனுஷ், ஜெயம் ரவி, ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் விவாகரத்து முடிவை அறிவித்திருக்கும் நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் விதமாக ஏ.ஆர் ரகுமானுடன் மனைவி சாய்ரா பானு தன்னுடைய திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதனால் 29 வருட திருமண வாழ்க்கை முடிவைக் கண்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் சாய்ராம் தம்பதியருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ள நிலையில் இந்த விவாகரத்து முடிவு திரையில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

'இந்த சவாலான நேரத்தில் எங்களுடைய தனிப்பட்ட உணர்வுகளுக்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டுகிறேன். வாழ்வில் ஏற்பட்ட வேதனை மற்றும் வலிகள் காரணமாக பிரிவு முடிவை எடுத்துள்ளேன். ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் தீர்க்க முடியாத இடைவெளி உருவானது. ஆழமான யோசனைக்குப் பிறகு பிரிவது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளோம்' என சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.