'Participation in governance; The Chief Minister will take the decision'- TK Elangovan's opinion

'ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வேண்டும்' என்று 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று வெளியான நிலையில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.

Advertisment

பதிவிடப்பட்டவீடியோவில், ''தமிழ்நாட்டில் இதற்கு முன்பு யாரும் கூட்டணி ஆட்சியில் குரலை உயர்த்தினார்களோ இல்லையோ 2016-ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்டோம். முன்னாடி இருந்த கட்சிகளெல்லாம் இப்படி பேசினார்களா என்று தெரியவில்லை. கேபினட்டில் இடம் வேண்டும் என்பது பவர் ஷேர். கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் ஷேர்.

Advertisment

பவர் ஷேர் என்பது எனக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது. 1999-ல் விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலில் முன்வைத்த முழக்கம் 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு'. நெய்வேலி அம்பேத்கர் சிலைக்கு மாலை போடும் பொழுது எழுப்பிய முழக்கம் 'கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்; எளிய மக்களுக்கும் அதிகாரம்'என பேசும் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அந்த வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இது சர்ச்சையை ஏற்படுத்த மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் 'எனக்கு தெரியவில்லை என்னுடைய அட்மின் போட்டு இருப்பார்' என தெரிவித்துவிட்டு சென்றார். தொடர்ந்து அந்த வீடியோ மீண்டும் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

Advertisment

NN

இந்நிலையில் ஆட்சியில் பங்குகுறித்துகடந்த தேர்தலின் போது எந்தவித ஒப்பந்தம் போடவில்லை என திமுகவின் டி.கே.இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் ''ஆட்சியில் பங்கு என்ற திருமாவளவன் கருத்து பற்றி தமிழக முதல்வர்தான் முடிவெடுப்பார். இதுகுறித்து திருமாவளவன் திமுகவிடம் நேரடியாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆட்சியில் பங்குகுறித்துகடந்த தேர்தலில் எந்தவித ஒப்பந்தமும் போடவில்லை. திருமாவளவன் பொதுவெளியில் பேசுவதற்கு நாங்கள் எப்படி பதில் கூற முடியும்.எங்களிடம் பேசினால் தலைவர்கள் பதில் சொல்வார்கள்.சீட்ஷேர்என்பதுகூட்டணிக்கட்சிகள் அனைத்தும் அமர்ந்து பேசும் பொழுதுதேர்தல்நேரத்தில் சில முடிவுகள் எடுப்பார்கள். இப்பொழுதுஅதற்குப்பதில் சொல்லக்கூடிய எந்த முடிவையும் திமுக எடுக்கவில்லை.இப்பொழுது அதைப் பற்றிப் பேச முடியாது. அடுத்த தேர்தலில் தான் பேச முடியும்''எனதெரிவித்துள்ளார்.