Skip to main content

பகுதி நேர சூரிய கிரகணம்; பிரத்யேக கண்ணாடிகள் மூலம் பார்த்து ரசித்த சிறுவர்கள்

Published on 25/10/2022 | Edited on 25/10/2022

 

A partial solar eclipse; Children enjoyed watching through special glasses

 

தமிழகத்தில் பகுதி நேர  சூரிய கிரகணம் ஆனது மாலை 5.14 மணிக்கு தொடங்கி 5.44 மணி வரை நிகழ்ந்தது. இந்திய அளவில் அகமதாபாத், மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களிலும் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சூரிய கிரகணத்தை பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பிரத்யேக கண்ணாடிகளை அணிந்துகொண்டு சிறுவர்களும் மற்றும் பலரும் இந்த சூரிய கிரகணத்தை கண்டுகளித்தனர்.

 

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அரிய நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும். தற்போது நிகழ்ந்துள்ளது பகுதி நேர சூரிய கிரகணம் ஆகும். இதனையடுத்து 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி தான் அடுத்த சூரிய கிரகணம் ஏற்படும். இதற்கு முன்பாக கடந்த 2019 டிசம்பர் மாதம் சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது. அதேபோல்  2020 ஜூன் மாதமும் இதேபோன்று பகுதி நேர சூரிய கிரகணம் நிகழ்ந்தது.

 

தமிழகத்தில் 5.14 மணிக்கு தொடங்கி 5.44 மணி வரை 8% அளவுக்கு மட்டுமே பார்க்கக் கூடிய அளவில் சூரிய கிரகணம் நிகழும் என அறிவியல் மையம் அறிவித்திருந்தது. கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்த்தால் பார்வையிழப்பு ஏற்படும் என அறிவியல் மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல் சூரிய  கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இன்று கோவில் நடைகள் மூடப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடி அறிவிப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Prime Minister Modi's announcement on Indian astronauts in space

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (27-02-24) காலை கேரளா சென்றார். அதனையடுத்து, அவர் அங்குள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குச் சென்று ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை ஆய்வு செய்தார். அவருடன், கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர். 

இதனையடுத்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷுசுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மிஷன் லோகா பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள் தான்” என்று கூறினார். 

Next Story

நிலவில் வெற்றிகரமாக கால் பதித்த ஜப்பான் விண்கலம்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Japanese spaceship successfully set foot on the moon

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இதன் மூலம் உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு பிறகு நிலவில் கால் பதித்த நான்காவது நாடாக இந்தியா மாறியிருந்தது.

அதிலும் குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் பதிவு செய்தது. இதனையடுத்து நிலவை ஆய்வு செய்ய ஜப்பான் விண்கலமான‘ஸ்சிலிம்’ விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் நிலவில் வெற்றிகரமாக ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் தரையிறங்கியதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்‌ஷா (JAXA) தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த 5 வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. ஏற்கெனவே 3 முறை இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.