Skip to main content

பார்த்திபன், லதா ரஜினிகாந்த் புகார் - உள்துறை, சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

Published on 24/08/2018 | Edited on 24/08/2018
po

 

குழந்தைகள் கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து உள்துறை மற்றும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை வால்டாக்ஸ் சாலையோரத்தில் பெற்றோருடன் சாலையோரத்தில் தூங்கி கொண்டிருந்த 8 மாத குழந்தை ரோஷன் கடந்த 2016 பிப்ரவரி 23ஆம் தேதியும், 9 மாத குழந்தை சரண்யா மார்ச் 28ஆம் தேதியும் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர்.


அவர்களை மீட்க வேண்டுமென நடிகர் பார்த்திபன், எக்ஸ்னோரா நிர்மல், லதா ரஜினிகாந்த் ஆகியோர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, குழந்தைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எக்ஸ்னோரா நிர்மல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.


இந்த வழக்குகளை அப்போது விசாரித்த நீதிபதிகள் எஸ். நாகமுத்து, வி.பாரதிதாசன் குழந்தை கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தத போது "குழந்தை கடத்தல் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், குழந்தைகள் கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக வேதனை தெரிவித்தனர். மேலும், மற்ற வழக்குகளை போல அல்லாமல், இந்த வழக்கிற்கு அதீத முக்கியத்துவத்தை அரசு வழங்கியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.


இந்த பிரச்சனையின் முக்கியத்துவத்தை தமிழக அரசு புரிந்துகொள்ளவில்லை எனவும்,  நீதிமன்றம் அழுத்தம் கொடுத்து தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. இந்த விவகாரத்தில் அரசே முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். நாட்டின் எதிர்காலம் கடத்தப்படுவதை பாதுகாக்க அரசு தவறியுள்ளதாகவும்  நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து, குஜராத்திற்கு தமிழக குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. 


அப்போது நீதிபதிகள், இங்கே உயிரோடு இருப்பவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை, இறந்தபிறகு மட்டுமே பாதுகாப்பு கிடைக்கிறது. 100க்கும் மேற்பட்ட தமிழக குழந்தைகள் விமான நிலையம் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கான நோக்கம் குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பினார். மேலும், நீதிபதிகள் மற்றும் காவல் துறையினரின் குழந்தைகள் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதாது; இந்தியாவின் கடைசி குடிமகனின் குழந்தை பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், செப்டம்பர் 24ஆம் தேதியன்று குழந்தை கடத்தல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக உள்துறை மற்றும் சமூக நலத்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அடடா ஆட்டம் பாட்டம் தான்’ - அம்பானி குடும்ப ப்ரீ வெட்டிங்கில் திரை பிரபலங்கள்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024

 

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“43 ஆண்டுகள்...” - பெற்றோர் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
soundarya rajinikanth about his parents

சண்டக்கோழி, சென்னை 600028 உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றிய சௌந்தர்யா ரஜினிகாந்த், கோவா படம் மூலம் தயாரிப்பாளரானார். பின்பு ரஜினியை வைத்து கோச்சடையான், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படங்களை இயக்கினார். அதன் பிறகு எந்த படங்களிலும் பணியாற்றாமல் இருந்த சௌந்தர்யா, தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து, 'கேங்க்ஸ்' என்ற தலைப்பில் வெப் தொடருக்கு ஷோ ரன்னராக பணியாற்றுகிறார்.

இதையடுத்து மூன்றாவது முறையாக ஒரு படம் இயக்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிப்பதாகவும் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. பின்பு ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்களில் பேசப்பட்டது. 

இந்த நிலையில் ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இருவரும் 43வது திருமண நாள் கொண்டாடியுள்ளதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது புகைப்படங்களை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “43 ஆண்டுகள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக நிற்கிறார்கள். 43 ஆண்டுகளுக்கு முன்பு அம்மா மாற்றிக் கொண்ட செயின் மற்றும் மோதிரங்களை ஒவ்வொரு ஆண்டும் அப்பாவை அன்புடன் அணியச் செய்கிறார். உங்கள் இருவரை மிகவும் நேசிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.  கடந்த 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி ரஜினிகாந்த் - லதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.