Skip to main content

போராட்ட காலத்தில்  முழுநேரமாக பள்ளிகளை நடத்திவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு முழுநேரப்பணி வேண்டும்.  முதலமைச்சருக்கு அவசர கோரிக்கை.

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

 

teachers


 
ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் அரசு பள்ளிகள் முடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அந்தந்த கிராம தன்னார்வ இளைஞர்கள் பள்ளிகளில் பாடம் நடத்துவதுடன் மதிய உணவும் வழங்கி வருகின்றனர். ஆனால் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பகுதி நேர ஆசிரியர்கள், போராட்டக் காலங்களில் முழுநேர பணி செய்ய பணிக்கப்பட்டுள்ளனர். அதனால் தற்போதும் முழுநேரப் பணி செய்து வருகிறார்கள். ஆனால் அனைத்து ஆசிரியர்களும் போராட்டம் முடிந்து பணிக்கு திரும்பும்போது மீண்டும் இவர்கள் பகுதி நேர ஆசிரியர்களாகவே வைக்கப்பட உள்ளனர்.  இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறும் போது...

 
கடந்த 22ந்தேதி முதல் ஜாக்டோஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் பள்ளிகளை பொறுத்தமட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களே திறந்து நடத்தி வருகின்றனர். ஆணைப்படி இப்பகுதிநேர ஆசிரியர்கள், வாரத்தில் 3 அரைநாட்கள் என மாதத்தில் மொத்தம் 12 அரைநாட்கள் பள்ளிக்கு வருகை புரிகின்றனர். பள்ளிகளின் சூழலைப் பொறுத்து தலைமை ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க கூடுதல் நாட்களும், கூடுதல் நேரமும் பணியாற்றி வருகின்றனர்.


ஆறு முதல் எட்டு வகுப்பு மாணவர்களுக்கு கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, வாழ்வியல்திறன் போன்ற கல்வி இணைச் செயல்பாடுகளை போதித்து வருகின்றனர். 16549 பேரில் தற்போது 12637 பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 2012ல் ரூ.5000 தொகுப்பூதியம் முதலில் தரப்பட்டது. 5 வருடத்துக்கு முன்பு ரூ.2000 ஜெயலலிதாவால் உயர்த்தப்பட்டது. ஒரு வருடத்துக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ரூ.700 உயர்த்தினார். எட்டு கல்வி ஆண்டுகளாக பணியாற்றி வருகின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.7700 என குறைந்த சம்பளமே தரப்பட்டு வருகிறது.


7வது ஊதியக்குழுவின் 30% ஊதிய உயர்வு அமல்செய்யவில்லை. மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியத்தையும் அமல் செய்யவில்லை.  மேலும், ஒப்பந்த வேலையில் உள்ளவர்களுக்கு சட்டபடி வருடாந்திர 10% ஊதிய உயர்வு, P.F., E.S.I., போனஸ் போன்றவையும் நடைமுறைப்படுத்தவில்லை. தொடர்ந்து முறையிட்டுவந்தாலும் அரசு கொஞ்சம்கூட கண்டுகொள்வதில்லை. ஆந்திராவில் இதே பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.14203 சம்பளம் தரப்படுகிறது. மேலும் மகளிருக்கு மகப்பேறுவிடுப்பும் தரப்படுகிறது. தமிழகத்தில் ஆந்திராவைப்போல அதிக ஊதியமும் வழங்குவதில்லை.


அரசின் பணபலன்களை எதுவும் பெறமுடியாமல், இக்குறைந்த ஊதியத்தில் தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்களை, பகுதிநேரம்போக இதர நேரங்களையும் பெரும்பாலான பள்ளிகளில் எல்லா வகையான பணிகளிலும் ஈடுபடுத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளிலும், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போதும் பகுதிநேர ஆசிரியர்கள் இதர பாடங்களை நடத்தி மாணவர்களுக்கு கல்வி பயின்று வருகின்றனர். வேலைநிறுத்த போராட்ட காலங்களில் மாற்று ஏற்பாடாக அரசு இப்பகுதிநேர ஆசிரியர்களையே 2015 முதல் பயன்படுத்தி வருகிறது. தற்போதும் இயக்கப்பட்டுவரும் பள்ளிகள் அனைத்துமே இப்பகுதிநேர ஆசிரியர்கள்தான் நடத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கென தனியே சம்பளம் எதுவும் வழங்காவிட்டாலும் முறைப்படி முழுநேரவேலையில் அரசு தங்களை அமர்த்திட வேண்டும் என கேட்டுவருகின்றனர். 8 வருடமாக பள்ளிகளை நடத்தும் அனுபவம், 4 வருட வேலைநிறுத்த போராட்டங்களின் போது பள்ளிகளை திறம்பட நடத்திய அனுபவமும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு உள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களில் பலர் Diploma முதல் Ph.D வரை அரசு கேட்கும் உரிய கல்வித் தகுதியை பெற்றுள்ளோம். இந்த வேலைக்கு நேர்முகத் தேர்வு நடத்தியும், சான்றிதழ் சரிபார்க்கபட்டும் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளோம்.


இந்நிலையில்  பகுதிநேர ஆசிரியர்களுக்கே ரூ.10000 சம்பளத்துடன்  முழுநேரவேலை கொடுங்கள் எனக் கேட்டு வருகிறார்கள். பகுதிநேர ஆசிரியர்களுக்கு பள்ளி நடத்தும் அனுபவமும், கல்வித் தகுதியும் இருக்கும்போது ஏன் புதிதாக தற்காலிக ஆசிரியர்களை ரூ.10000 சம்பளத்தில் பணி அமர்த்தனும் என அரசிடம் முறையிட்டு வருகின்றனர்.0


இப்பகுதிநேர ஆசிரியர்களை திட்டவேலையில் பணிஅமர்த்திய அரசு,  இந்த 8 கல்வி ஆண்டுகளில் இதுவரை பணிநிரந்தரம் செய்யாமல் உள்ளது. நாங்கள் 1 லட்சம் சம்பளம் கேட்கவில்லை. அவசர காலங்களில் அரசுக்கு கை கொடுக்கும் எங்களுக்கு முதல்கட்டமாக முழுநேரவேலையாவது கொடுங்கள் என கேட்கிறோம். இப்போதுள்ள பகுதிநேர வேலையால் எங்களின் மீதி நேரமும் உரிய ஊதியமின்றி சுரண்டப்படுகிறது. ரூ.7700 சம்பளத்தில் பள்ளிக்கு சென்றுவர பேருந்து கட்டணம், வண்டி பெட்ரோல் செலவு, சாப்பாடு, டீ செலவுகளைகூட செய்யமுடியவில்லை. குழந்தை குட்டிகளோடு குடும்பத்தையும் இந்த சம்பளத்தில் கவனிக்க முடியவில்லை.


எனவே புதிதாக வேலைக்கு ஆள்தேடும்போது இந்த பகுதிநேர ஆசிரியர்களை ஏன் தேர்வு செய்யக்கூடாது? வேலைநிறுத்தம் நடக்கும்போது மட்டுமின்றி அனைத்து வேலைநாட்களிலும் முழுநேர வேலை கொடுங்கள். இப்போதைக்கு இந்த ரூ.10000ஐ பகுதிநேர ஆசிரியர்களுக்கே கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். எங்களில் 90% பேர் திருமணமானவர்கள், ஏழை விவசாயக் குடும்பத்தினர்கள்தான். எனவே கருணை காட்டுங்கள். நல்ல வழிகாட்டுங்கள் இந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு என்றுதானே கேட்கிறோம். யாராக இருந்தாலும் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று கல்விஅமைச்சர் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.


ஆனால் இப்போது அனுபவம், கல்வித்தகுதி பார்க்காமல், ஓய்வு பெற்றவர்களைகூட இந்த ரூ.10000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதாக வெளிவந்த அறிவிப்பு அமைச்சரின் முந்தைய அறிவிப்புக்கு நேர்எதிராக உள்ளது. பல வருடமாக பள்ளிகளை கவனித்து வரும் பல்வேறுவகை 12000 பகுதிநேர ஆசிரியர்களை, முழுநேர ஆசிரியர்கள் என்ற அறிவிப்பினை இந்த தருணத்திலாவது அறிவியுங்கள் என முதல்வருக்கு அவசர கோரிக்கையாக வேண்டுகோள் வைத்துள்ளோம் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.