பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தந்தையின் உடல்நலன் மற்றும் சகோதரி மகளின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள என 11 காரணங்களை குறிப்பிட்டு பரோல் வேண்டும் என கேட்டிருந்தார்.

Advertisment

Parole extension for perarivalan

அவரின் கோரிக்கைப்படி, தமிழக அரசு ஒரு மாத கால பரோல் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த பேரறிவாளன் தனது தாய் - தந்தையார் உள்ள ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். தனது சகோதரியின் மகள் திருமணத்தில் கலந்துக்கொண்டார், தனது தந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்தார்.

Advertisment

இந்நிலையில் பேரறிவாளனின் ஒரு மாத கால பரோல் டிசம்பர் 12ந் தேதியோடு (இன்றோடு) முடிவடைகிறது.இந்த நிலையில் தனது கணவர் குயில்தாசன் உடல் நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவ அறிக்கைகளை அரசுக்கு அனுப்பி, மேலும் ஒரு மாத கால பரோல் வழங்க வேண்டும்மென பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தித்திருந்தார்.

இந்நிலையில் தற்போதுபேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு செய்துள்ளது தமிழக அரசு.

Advertisment