Advertisment

நாடாளுமன்ற தேர்தல்; போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு

Parliamentary elections; Police DGP Shankar Jiwal action order

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக காவல் துறையில் பணியிட மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “சொந்த ஊர் அல்லது தொடர்ந்து ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

Advertisment

அதாவது உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரை உள்ளவர்களில்ஜூன் 30 ஆம் தேதிக்குள் 3 ஆண்டுகள் பணி நிறைவடையும் அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்திற்குஜனவரி 10 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது.

Advertisment

நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள காவல் அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது. ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்ற காவல்துறை அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையானது இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின் படி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CIRCULAR Parliament police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe