Skip to main content

நாடாளுமன்ற தேர்தல்..ஆரணி பாராளுமன்ற தொகுதியை அறிவோம்

Published on 17/03/2019 | Edited on 17/03/2019

இந்த தொகுதி மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளார்கள். அதற்கடுத்தயிடத்தில் நெசவு தொழில் உள்ளது. அதிகளவு கிராமங்கள் கொண்ட தொகுதி இது. 

 

கடந்த 2009 தேர்தலுக்கு முன்பு வரை ஆரணி பாராளுமன்ற தொகுதி வந்தவாசி தொகுதியாக இருந்தது. பின்னர் இதில் சில தொகுதிகள் நீக்கப்பட்டு சில தொகுதிகள் புதியதாக சேர்க்கப்பட்டு ஆரணி நாடாளுமன்ற தொகுதியாக உருவாக்கப்பட்டது. தற்போது இந்த தொகுதிக்குள் ஆரணி, போளுர், செய்யார், வந்தவாசி, செஞ்சி, மயிலம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் போளுர், வந்தவாசி, செஞ்சி, மயிலம் என 4 தொகுதிகளில் திமுகவும், ஆரணி, செய்யார் என இரண்டு தொகுதிகளில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த தொகுதிக்குள் நகராட்சிகள் என எடுத்துக்கொண்டால் ஆரணி, வந்தவாசி, செய்யார் மட்டும்மே. செஞ்சி, போளுர் போன்றவை பேரூராட்சிகளாக உள்ளன.

 

election

 

இதற்கு முன்பு வந்தவாசி தொகுதியாக இருந்தபோது, காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. 1962ல் காங்கிரஸ் ஜெயராமன், 1967, 1971ல் திமுக சார்பில் விஐடி விஸ்வநாதன், 1977ல் அதிமுக சார்பில் வேணுகோபால், 1980ல் காங்கிரஸ் பட்டுசாமி, 1984, 1989ல் காங்கிரஸ் பலராமன், 1991ல் காங்கிரஸ் கிருஷ்ணசாமி, 1996ல் தாமக பலராமன், 1998, 1999ல் பாமக துரை,  2004ல் மதிமுக செஞ்சி.ராமச்சந்திரன் வெற்றி பெற்று எம்.பியாக இருந்தனர்.

 

 

தொகுதி பெயர் மாற்றம் ஏற்பட்ட பின் நடைபெற்ற தேர்தலில் 2009ல் காங்கிரஸ் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். 2014ல் அதிமுகவை சேர்ந்த செஞ்சி.ஏழுமலை என்பவர் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிவானந்தம் தோல்வியை சந்தித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் நின்ற விஷ்ணுபிரசாத் கணிசமான வாக்குகளை பெற்றுயிருந்தார்.

 

 

இந்த தொகுதியில் 7 முறை காங்கிரஸ் தனித்து நின்றும், கூட்டணி வைத்தும் வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டு முறையும், அதிமுக இரண்டு முறையும், பாமக இரண்டு முறையும், தமாக, மதிமுக தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.

 

 

தற்போது சுமார் 14 லட்சம் வாக்காளர்கள் இந்த தொகுதியில் உள்ளனர். இன்னும் இறுதி பட்டியல் வெளியிடப்படவில்லை. 

 

 

தொகுதிக்கு தேவைகள்.

 

 

1.   ஆரணி, செய்யார் பகுதிகள் நெசவு தொழில் முக்கியமானதாக உள்ளது. ஆரணி பட்டு மிகவும் பிரபலமானது. இதனால் ஆரணியில் பட்டு பூங்கா அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி நெசவாளர்களின் நீண்ட காலகோரிக்கை. இதுவரை எந்த எம்.பியும் அதற்கான முயற்சிகளை எடுத்து வெற்றி பெறவைக்கவில்லை.

 

2.   வந்தவாசியில் கோரைப்பாய் மற்றும் லுங்கி நெசவு அதிகம். இதற்காக ஒரு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கை அதுவும் நிறைவேறவில்லை.

 

3.   திண்டிவனம் டூ நகரிக்கு இரயில்பாதை அமைக்கப்படும் என 2004ல் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியது. இந்த பாதை வந்தவாசி, ஆரணி, செய்யார் தொகுதிகளை தொட்டப்படி நகரிக்கு செல்கிறது. அந்த திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரபூர்வமற்ற முறையில் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த அதிமுகவை சேர்ந்த ஏழுமலை, எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

4.   ஆரணி, களம்பூர் பகுதியில் மட்டும் சுமார் 200 நெல் அரவை ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் அரிசி வகைகள் இந்தியா மட்டும்மல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக மத்தியரசின் சார்பில் ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான அலுவலகம் அமைக்க வேண்டும் என்பதும் கோரிக்கை. இதையும் வெற்றி பெற்றவர்கள் கண்டுக்கொள்ளவில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒற்றுமையே இல்லாத இந்தியா கூட்டணி எப்படி ஆட்சி நடத்தும்?' - எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
'How can India alliance govern without unity?'-Edappadi Palaniswami's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில், ஆரணியில் அதிமுக வேட்பாளர் ஜி.வி கஜேந்திரனை ஆதரித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்தார். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து மக்களுக்கு உணவளிப்பவர்கள் விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள். விவசாயி எனச் சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயிதான் எதற்கும் பயப்படமாட்டான். விவசாயம் என்பது ஒரு புனிதமான தொழில். அந்தப் புனிதமான தொழிலை ஸ்டாலின் கொச்சைப்படுத்தியுள்ளார். என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக் கொண்டு விவசாயிகளை அவமானப்படுத்தாதீர்கள். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் செழிப்போடு, நலமோடு இருந்தார்கள். இரண்டு முறை தொடக்க வேளாண்மை வங்கியில் பயிர்க்கடன் பெற்று இருந்தார்கள். அவற்றைத் தள்ளுபடி செய்தோம்.

2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தள்ளுபடி செய்தார். 2021 இல் நான் முதல்வராக இருந்த பொழுது தள்ளுபடி செய்தேன். 2017 ஆம் ஆண்டு நான் முதல்வராக பதவியேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லை. அப்படிப்பட்ட காலத்தில் கூட மக்களுக்கு தங்கு தடை இல்லாமல் குடிநீரை வழங்கினோம். நீங்கள் ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றி தேசிய அளவில் விருதுகள் பெற்றுள்ளீர்களா? ஆனால் திறமையான அரசாங்கம் என்பதற்கு ஆதாரமாக தேசிய அளவில் பல விருதுகளை நாங்கள் பெற்றுள்ளோம். போக்குவரத்து துறையில் சிறப்பாக செயல்பட்டு விருதுகள் பெற்றோம். மின்சாரத் துறையில் சிறப்பாக செயல்பட்டு தேசிய அளவில் விருது பெற்றோம். உள்ளாட்சியில் சிறந்த நிர்வாகம் மிக்க அரசு என 140 தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே அரசாங்கம் அதிமுக அரசு.

சமூக நலத்துறையில் விருது, உயர்கல்வியில் விருது, பொதுத்துறையில் விருதுகள். இப்படி துறையாக சிறப்பான நிர்வாகத்தின் காரணமாக தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்று சாதனையை நிலைநாட்டிய அரசு அதிமுக அரசு. இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை. இன்னும் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக அளித்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக கொண்டு வந்த பல நலத்திட்டங்களை ரத்து செய்ததே திமுகவின் ஒரே சாதனை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசீர்வாதம் உள்ளவரை அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. அனைத்து தடைகளையும் உடைத்து மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

Next Story

சென்னையில் பிரதமரின் வாகனப் பேரணி - ஏற்பாடுகள் தீவிரம்! (படங்கள்)

Published on 09/04/2024 | Edited on 09/04/2024

 

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. ஏற்கனவே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகள், தேதி நெருங்கி விட்டதால் பிரச்சாரத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இன்று மாலை சென்னை வரும் பிரதமர், தியாகராயர் நகரில் பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி (ரோடு ஷோ) மேற்கொள்கிறார். அதைமுன்னிட்டு அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

படங்கள் : எஸ்.பி.சுந்தர்