ஊரடங்கை மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டிருந்தாலும் ஏப்ரல் 20-க்குபிறகு பல்வேறு துறைகளுக்குத் தளர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதனால், ஊரடங்கில் சில மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன. இந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் எல்லோரும் அலுவலகம் வர வேண்டும் எனவும், அலுவலகத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பணியாற்றவேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/402_15.jpg)
இதில், பாஜக உள்பட அதன் தோழமைக் கட்சிகளின் அமைச்சர்கள் பலரும் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைய யோசிக்கிறார்களாம். கரோனா அச்சம்தான் இதற்குக் காரணம். அதனால், 'ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் மே 3 -ந்தேதி வரை வீட்டிலிருந்தபடியே இயங்குகிறோம்' எனப் பிரதமர் அலுவலகத்துக்குத் தகவல் தந்துள்ளனர்.
அமைச்சர்களின் இந்தக் கோரிக்கை , பிரதமர் மோடியின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவரோ விலக்கு அளிக்க மறுத்து விட்டாராம். இதனையடுத்து, "உங்களின் கோரிக்கையைப் பிரதமர் நிராகரித்து விட்டார் " எனச் சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்குத் தெரிவித்துள்ளதாம் பிரதமர் அலுவலகம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)