Advertisment

நாடாளுமன்ற குழுத் தலைவர், கொறடா யார்? - கூடியது  திமுக எம்பிக்கள் கூட்டம் ( படங்கள்)

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. நாளை பிரதமர் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

அதேபோல் டெல்லியில் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதிமாறன் உட்பட புதிதாக தேர்வான 21 திமுக எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர், கொறடா உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனம் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளது.

meetings Parliament
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe