ADVERTISEMENT

மசோதாவின் மீது வாக்கெடுப்பு, அஇஅதிமுக உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை!- ப.சிதம்பரம் ட்வீட்!

05:57 PM Jul 31, 2019 | santhoshb@nakk…

இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு 'முத்தலாக் தடை மசோதாவை' மக்களவையில் தாக்கல் செய்தது. மக்களவையில் பாஜவுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதால், இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் காலை முதலே தொடங்கிய நிலையில், மாலை 06.00 மணி வரை நீடித்தது. தமிழகத்தில் திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதே போல் அதிமுக உறுப்பினர்களும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் "முத்தலாக் தடை மசோதா" மாநிலங்களவையில் நிறைவேறியதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார். இதனையடுத்து மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.




இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் "முத்தலாக் தண்டனைச் சட்ட மசோதா செல்லாது என்று மிக விளக்கமாக மாநிலங்களவையில் அஇஅதிமுக தலைவர் உரையாற்றினார். அவை உறுப்பினர்கள் அவரது உரையைப் பாராட்டினார்கள். மசோதாவின் மீது வாக்கெடுப்பு, அஇஅதிமுக உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை! மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை!" என்று குறிப்பிட்டுள்ளார்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT