Advertisment

குரூப்-1 தேர்வில் இடம்பெற்ற 'பரியேறும் பெருமாள்'-'இனி அது மானுடத்தின் பிரதி'- மாரிசெல்வராஜ் நெகிழ்ச்சி!!   

mariselvaraj

Advertisment

இன்று (3/1/2021) நடைபெற்ற குரூப்-1 தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த2018-ஆம் ஆண்டுவருடம் திரைக்கு வந்து அனைத்து தரப்பினாராலும்வரவேற்பையும், பாராட்டையும்பெற்ற திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. இத்திரைப்படத்தினைஅறிமுக இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கியிருந்தார். 'நீலம்' தயாரிப்பு குழுமம்சார்பில்இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருந்த இந்த படத்தில்'பரியன்' என்ற கதாபாத்திரத்தில் கதிர்நடித்திருந்தார். கதாநாயகியாக ஆனந்தியும், அதேபோல்கதிரின் நண்பராகயோகிபாபுவும் நடித்திருந்தனர்.

இன்று (3/1/2021) நடைபெற்ற குரூப்-1 தேர்வு வினாத்தாளில், 'தலை சிறந்த படைப்பான''பரியேறும் பெருமாள்''என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில்சரியானவற்றை தேர்வு செய்யவும்' என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து தனது கருத்தைப்பகிர்ந்துள்ள திரைப்படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ், ''பரியேறும் பெருமாள் என்கின்ற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது. இனி அது மானுட சமூகத்தின் பிரதி;யாவருக்கும் நன்றி''என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

mariselvaraj pariyerumperumal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe