Advertisment

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை; போலீசார் விசாரணை

parikkal railway station nearest youngster incident 

சென்னை - திருச்சி ரயில் பாதையில் விழுப்புரம் உளுந்தூர்பேட்டை இடையில் உள்ளது பரிக்கல் ரயில் நிலையம். இப்பகுதியில் உள்ள தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் சடலமாகக்கிடப்பதாக அப்பகுதி மக்கள் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அப்போது இறந்து கிடந்த இளைஞர் யார் என்பது குறித்து மேலும் விசாரணை செய்தனர். அதில், ஊத்துக்கோட்டை பகுதியைச்சேர்ந்த தினேஷ்குமார் என்பதும் இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தவர் பரிக்கல் ரயில் நிலையம் அருகே வந்தபோது தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏற்கனவே கொண்டு வந்த மதுவை எடுத்துச் சென்று தண்டவாளம் அருகேஅமர்ந்து குடித்துள்ளார்.

Advertisment

மது போதையில் இருந்த தினேஷ்குமார் அந்த நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ராக்போர்ட் அதிவிரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தினேஷ் குமார் உடலைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தினேஷ் குமார் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து அவர் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் ரயில்வே போலீசார்.

police Train ulundurpet villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe