தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரி வேந்தர் பிரதமர் நேரில் வரவில்லை என்றால் பரவாயில்லை நிவாரண தொகையை தந்தால் போதும் என்றார்.

kaja

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தஞ்சை பட்டுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வந்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரி வேந்தர் அங்குள்ள விவசாயிகளுக்கு ஆறுதல்கூறினார். மேலும் புயலால் வீழ்ந்துகிடக்கும் தென்னைமரங்களை அரைத்துபொடியாக்கி அதனை உரமாக பயன்படுத்த வழிவகை செய்ய 3 அரைவை இயந்திரங்களையும்,தென்னங்கன்றுகளையும் வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

kaja

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய உதவிகளை செய்திட வேண்டும், இங்கு தென்னையை அடிப்படையாக வைத்து வாழ்ந்துவரும், கயிறு திரித்தல்,சிறை எடுத்தல் போன்ற தொழில் செய்யும்மக்களுக்கும் இரண்டு வருடத்திற்காவது மாதம் 10 ஆயிரம் ரூபாய் வாங்கினால்தான் மக்கள்பழைய நிலையை அடைய முடியும். புயல் பாதிப்பை பார்க்க பிரதமர் மோடி வரவில்லை. என்னை பொறுத்தவரை அவர் வரவில்லை என்றால் என்ன இங்கு நிவாரண உதவிதான் தேவை எனவே பிரதமர் வராமல் இருக்கலாம் ஆனால் தராமல் இருக்கக்கூடாது. 15000 கோடி நிவாரண நிதியாக கேட்டுள்ளது தமிழக அரசு அதில் 2000 கோடியை விரைவாக வழங்கிட மத்திய அரசு ஆவண செய்திட வேண்டும் எனக்கூறினார்.