Advertisment

சாலை விபத்தில் உயிரிழந்த பெற்றோர்; படுகாயத்துடன் மீட்கப்பட்ட குழந்தை

nn

Advertisment

நெல்லையில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் தாய், தந்தை உயிரிழந்த நிலையில் குழந்தை படுகாயத்துடன் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ளது ரெட்டியார் பாளையம். அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மயில்ராஜ்-சுகன்யா தம்பதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் நெல்லையை நோக்கிஇருசக்கர வாகனத்தில் மயில்ராஜ்-சுகன்யா தம்பதியினர் குழந்தையுடன்சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது மானூர் அருகே கார் மோதியதில் மயில்ராஜ், சுகன்யா இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தூக்கிவீசப்பட்ட குழந்தை நடுசாலையில் கிடந்தது. பதறி அடித்துக்கொண்டுஓடி வந்து குழந்தையை படுகாயத்துடன் மீட்ட வாகன ஓட்டிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அஜுமத் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சக்கர வாகன விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் படுகாயத்துடன் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

police thenkasi nellai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe