/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1867.jpg)
சென்னையில் காவிரி நீர் உரிமைக்காக கடந்த 2016ஆம் நடந்த பேரணியில் மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் எனும் இளைஞர் தன்னை தீயிலிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.
அவரின் பெற்றோர் இன்று (23.09.2021) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், “கடந்த 16.09.2016 அன்று காவிரி நதிநீர் உரிமைக்காக சென்னையில் நடந்த மாபெரும் பேரணியில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த 21 வயதாகியிருந்த எங்களது மகன் பா. விக்னேஷ் தன்னை தீயிலிட்டு ஈகம் செய்துகொண்டார்.
காவிரித்தாயின் மடியில பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த எங்களது மகன், தன் மக்களின் உரிமைகளை மீட்டுத்தர தன்னால் இயன்றதைச் செய்தாக வேண்டும் எனும் உண்மையான உணர்வினால் உந்தப்பட்டு, ஆகப்பெரும் ஈகச்செயலை செய்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_464.jpg)
எங்களது மகன் எதற்காக போராடி உயிர்த் தியாகம் செய்தாரோ அச்செயலை செய்து முடிக்க வருங்கால தலைமுறைகள் இனி இறந்து போராடாமல், ஜனநாயக வழியில் இருந்து போராடி காவிரி நதிநீர் உரிமையை வென்றுக்காட்ட வேண்டும் என்பதையும் அழுத்தமாக பதிவுசெய்ய விரும்புகிறேன்.
சாதி, மத, அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எட்டுகோடி மக்களுக்காக தன்னுயிரை ஈந்த எங்களது மகனின் உயிர்த் தியாகத்தை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவரது நினைவாக, நினைவுச்சின்னம் அமைக்க கோரி அனைத்து சமூக, அரசியல் இயக்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், தாய்மார்களின் தரப்பில் தமிழக அரசுக்கு எங்களது கோரிக்கையை முன்வைக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)