Advertisment

      பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை பிள்ளைகள் மீது தினிக்கக்கூடாது - நடிகர் விவேக்

vi

பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை பிள்ளைகள் மீது தினிக்கக்கூடாது என தனியார் பள்ளித்திறப்பு விழாவில் பேசினார் நடிகர் விவேக்.

Advertisment

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணல் மேட்டில் தனியார் பள்ளித் திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய விவேக், ‘’ விவேக் என்பவன் திரைப்படங்கள் மூலம் அனைவருக்கும் அறிமுகமாகி இருந்தாலும், முன்னாள் குடியரசுத் தலைவர் வழி காட்டுதல்களில் சிலவற்றை தான் பின்பற்றுவதனாலதான் சமூகத்தில் மதிக்கப்பட்டு வருகிறேன். விவசாயிகள் நிறைந்த இந்த பகுதியில் சர்வதேச தரத்தில் ஒரு பள்ளி உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. மனிதனை மனிதனாக்குவதும், ஒருவரிடமுள்ள திறமையை வெளிக்கொணர்வதும் தான் உண்மையான கல்வி.

Advertisment

மாணவர்கள் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருக்கவேண்டும். பெற்றோர்கள் தங்களது விருப்பங்களை கருத்துக்களை பிள்ளைகளிடத்தில் ஒருபோதும் திணிக்கக்கூடாது. தனது வாழ்நாளில் கிடைக்காததை, தனது பிள்ளைகள் மூலம் அடைந்து விடவேண்டும் என்று முயற்சிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளிடம் சிறந்த நண்பர்களாகவும், தோழிகளாகவும் பழகவேண்டும்.

இந்தியாவுக்கும், இந்திய இளைஞர்களுக்கும் முழக்கங்களைக் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர். அவரின் கருத்துக்களை வாழ்வியலில் கடைப்பிடிக்க வேண்டும். ஆசிரியர் என்பவர் என்றும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

உலகின் மிகச் சிறந்த உயர்ந்த மனிதர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். அவர்தான் இந்தியாவுக்கு என்றும் ஹீரோ. இக்கல்வி நிறுவனம் ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வியைக் குறைந்த கட்டணத்தில் போதிக்க வேண்டும். மணல்மேடு மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு அதை பராமரிக்கவேண்டும்.’’ என்றார் விவேக்.

vivek
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe