Skip to main content

 பெற்றோருடன் சென்ற காதல் மனைவி; விரட்டியடிக்கப்பட்ட இளைஞர் 

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
parents of the girl who took away her love wife

வேலூர், சத்துவாச்சாரிக்கு அருகேயுள்ள அலமேலுமங்காபுரம் அழகிரி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் மணிகண்டன்(21). இவரும், காட்பாடி அருகேயுள்ள குப்பத்தாமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்துவந்தனர். இது தெரியவர இளம்பெண்ணின் பெற்றோர் கண்டித்து வந்திருக்கின்றனர். 

இந்த நிலையில், எதிர்ப்பைமீறி கடந்த 3-ஆம் தேதி இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டார் மணிகண்டன். இரண்டு நாள்கள் தேடி அலைந்த பிறகே மகள் தங்கியுள்ள வீட்டை பெற்றோர் கண்டுபிடித்தனர். கடந்த 5-ஆம் தேதி, உறவினர்களுடன் அங்குவந்த இளம்பெண்ணின் பெற்றோர் சமாதானம் செய்து மகளை மட்டும் தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர். 

இதையடுத்து, காதல் மனைவியைத் தேடி கடந்த 9-ஆம் தேதி அவரது வீட்டுக்கு மணிகண்டன் சென்றுள்ளார். அங்கு காதல் மனைவி இல்லை. வீட்டில் இருந்த பெண்ணின் பெற்றோர் ஆத்திரப்பட்டு மணிகண்டனை துரத்தியடித்திருக்கின்றனர். இந்த நிலையில், தனது காதல் மனைவியை அவரது பெற்றோர் மறைத்துவைத்திருப்பதாகவும், அவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரியும் மணிகண்டன் அளித்துள்ள புகார் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், திடீரென வேலூரில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெங்களூரில் இருந்து கைப்பேசி அழைப்பு ஒன்று மணிகண்டனுக்கு வந்துள்ளது. அதில், “நான் பெங்களூரில் இருக்கிறேன். என்னை வந்து அழைத்துச் செல்” என அவரின் காதல் மனைவி கூறியுள்ளார். உடனடியாக பெங்களூர் விரைந்து சென்ற மணிகண்டன் பெண்ணை நேரில் சந்தித்து அழைத்து வந்து வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நேற்று (14.06.2024) தன்னையும் தன் மனைவியும் காப்பாற்றுங்கள் எனத் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தம்பியின் உடலை மீட்டுத் தாருங்கள்; ஆட்சியர் காலில் விழுந்து கதறிய அக்கா

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
sister asked collector to return body of her brother who passed away in Malaysia

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுன் தேவராஜ் (39). இவர் எலக்ட்ரீசியன் வேலை தேடி மலேசியா சென்ற நிலையில் அங்கு இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்டுத்தரக்கோரி இன்று காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் மனு அளிக்க வந்த உயிரிழந்த அணு தேவராஜன் சகோதரி விக்டோரியா மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி காலில் விழுந்து கதறி விழுந்த காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

“எப்படியாவது எனது தம்பியின் உடலை மீட்டுத் தாருங்கள்..” எனக் கோரிக்கை வைத்து மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் அவரை மருத்துவர்கள் பரிசோதித்துப் பிறகு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு சிகிச்சையாக அழைத்துச் சென்றனர். இங்கிருந்து தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பதிலளித்துள்ளார்.

Next Story

சிறையில் சிக்கிய குட்டி செல்போன்; ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பரபரப்பு

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Little Cell Phone Trapped in Jail; The sensation in the Armstrong case

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த கொலை சம்பந்தமாக தமிழக தலைமைச் செயலாளருக்கும், தமிழக டிஜிபிக்கும் தேசிய பழங்குடியினர் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளிகள் உள்ள சிறையில் செல்போன் கண்டுபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரல் அளவு கொண்ட செல்போனை பொறி வைத்து காவல் துறையினர் பிடித்துள்ளனர். பூவிருந்தவல்லியில் உள்ள தனிக் கிளைச் சிறையில் சிறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் லீ பிரிட்டோ காவலர்கள் குழுவுடன் சிறையில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது 1 வது ப்ளாக்கில் படிக்கட்டின் கீழே கை விரல் அளவே கொண்ட செல்போன், சிம் கார்டு, மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 3 பேட்டரி பறிமுதல் செய்தனர்.

Little Cell Phone Trapped in Jail; The sensation in the Armstrong case

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளராக பொறுப்பில் உள்ள ஜேம்ஸ் லீ பிரிட்டோ பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து கஞ்சா வழக்கில் கைதான மாறன் மற்றும் கொள்ளை வழக்கில் கைதான பாஸ்கர் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் உள்ள பூவிருந்தவல்லி தனிக் கிளைச் சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிறையில் உள்ள 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.