/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/995_100.jpg)
மதுரை மாவட்டத்தில் 9 வகுப்பு மாணவரைஅடித்த தலைமைஆசிரியரைகைது செய்யக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவரின்பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், தாடையாம்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் நாகராஜ், அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இப்பள்ளியில் பிரபு என்பவர் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தலைமை ஆசிரியர் பிரபு, மாணவர் நாகராஜின் காலில் மூங்கில் பிரம்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த மாணவர் நாகராஜுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், ஆனால், பிரபுவுக்கு நடக்க முடியாத நிலை ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாகவும்கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மகன் இந்த நிலைமைக்கு வரக் காரணமான தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என மதுரை ஆட்சியரிடம் மாணவரின் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)