சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகன் சுரேஷ்குமார். இவர் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மகேஸ்வரி நேற்று கல்லூரிக்கு சென்று மகன் சரியாகப் படிப்பதில்லை என்று கல்லூரி ஆசிரியர்களிடம் கூறி அறிவுரை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் வீட்டிற்கு வந்து அவனது அம்மாவுடன் கல்லூரியில் ஏன் என்னை பற்றி சொன்ன என்று சண்டை போட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்பு வீட்டை விட்டு கோபித்து சென்றுள்ளார்.

Advertisment

student

Advertisment

இரவு வெகு நேரமாகியும் மகன் திரும்ப வராததால் கேளம்பாக்கம் போலீசில் மகன் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார் மகேஸ்வரி. இதனையடுத்து இந்த புகார் பற்றி விசாரித்த போலீஸாருக்கு உத்தண்டி கடற்கரை பகுதி அருகே சடலம் ஒன்று கரை ஒதுங்கியதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது தான் அது சுரேஷ் குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது தாய் மகேஸ்வரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சுரேஷ் குமாரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கானாத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.