Advertisment

பரங்கிப்பேட்டை போதைப்பொருள் விவகாரம்! உதவி ஆய்வாளர்  உட்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்...

parangipettai incident

கடலூர் மாவட்டம்,பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டை கடற்கரையோர மீனவ கிராமத்தில் இருந்து மீனவர் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி கடற்கரையோரம் செல்லும்போது டீ தூள் என்ற விளம்பரத்துடன் எட்டு போதைப்பொருள் பாக்கெட்டுகள் கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கூறியுள்ளார். அதை கிராம நிர்வாகத்தின் மூலம் போதை பாக்கெட்டுகளை போலீசாரிடம் எடுத்து கொடுத்துள்ளனர்.இந்த நிலையில் போலீசார் அப்போது இருந்த கரோனா, சிஏஏ போராட்டம் உள்ளிட்ட வேலைப்பளுவின் காரணமாக இந்தப் பொட்டலங்களை சாதாரண டீ தூள் எனக்கருதி காவல் நிலையத்தின் ஒரு மூலையில் போட்டுவிட்டனர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து கடந்த வாரம்மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்கிய போதை பாக்கெட்டுகளும் இதுவும் ஒன்றாக இருந்ததால் காவல் நிலையத்தில் போட்டுள்ள பாக்கெட்டுகளை பரங்கிப்பேட்டை காவல்துறையினர் தேடி உள்ளனர்.அதில் 4 பாக்கெட் மட்டுமே இருந்துள்ளது.மீதி 4 பாக்கெட் அங்கிருந்து காணவில்லை. இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அபினவ் ஸ்ரீ விசாரணை நடத்தினர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து பணியில் அலட்சியமாக இருந்ததையொட்டி பரங்கிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன், தலைமை காவலர் பாக்கியராஜ், தனிப்பிரிவு சிறப்பு உதவிகாவலர் ஆய்வாளர் ராம்குமார் உள்ளிட்ட மூன்று பேர்களை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல் நிலையத்தில் இருந்த மற்ற போலீசார் இதனை அறிந்து பதற்றத்தில் உள்ளனர்.

parangipettai police transferred
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe