நாடு முழுவதும் கரோனா வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தநிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஜமாத் அமைப்பு சார்பில் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

parangipettai chidambaram

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

. இதில் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், புவனகிரி வட்டாட்சியர் சுமதி ஆகியோர் கலந்துகொண்டு பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார்கள். இதனைத்தொடர்ந்து பரங்கிப்பேட்டை நீதிமன்றத்திற்குச் சென்று அங்கு பணியில் இருந்த நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. பின்னர் பரங்கிப்பேட்டை பகுதிக்கு வரும் பேருந்து மற்றும்அனைத்து வாகனங்களுக்கு பேரூராட்சி சார்பில் கிருமி நாசினி தெளித்து அனுப்பி பேரூந்து நிலையத்தில் வைக்கப்பட்ட வாஸ்பேசனில் அனைவரும் கையை கழுவிக்கொண்டு பேருந்து நிலையத்தில் அமரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பின்னர் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.