Parangipettai

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டை கடற்கரையில் டீ தூள் விளம்பரத்துடன் 4 பாலித்தீன் பாக்கெட்டுகளை அப்பகுதி மீனவர்கள் கடலில் கண்டெடுத்து பரங்கிப்பேட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து கரை ஒதுங்கிய பாலித்தீன் பாக்கெட்டுகளைக் கைப்பற்றி சோதனை செய்தனர். இது போதைப்பொருளா? போதைப்பொருளைக் கடற்பகுதி வழியாக கடத்த முயன்ற போது தவறி விழுந்ததா? போலீசாருக்கு பயந்து கடலில் வீசப்பட்டதா? இல்லை டீ தூளாக இருக்குமோ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். பின்னர் அந்த பொருளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

Advertisment

இதேபோல் மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று முன்தினம் பல பாக்கெட்டுகள் கரைஒதுங்கிய நிலையில் அதே போன்று புதுப்பேட்டை கடற்கரையிலும் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.