ADVERTISEMENT

பரமக்குடி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்  

11:00 AM Mar 10, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறி பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் பள்ளி மாணவியிடம் நடத்திய ரகசிய விசாரணையில் பள்ளி படிப்புக்கு உதவி செய்வதாக கூறி சிலர் பாலியல் வன்கொடுமை செய்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், பரமக்குடி 3 வது வார்டு கவுன்சிலரும், பரமக்குடி அதிமுக நகர அவை தலைவருமான சிகாமணி, ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜா முகமது, மறைத் தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர் ஆகியோர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய உமா மற்றும் கயல்விழி ஆகியோரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் படிப்புக்கு உதவி செய்வதாக கூறி ஏழை சிறுமிகளிடம் அத்துமீறியது தெரியவந்துள்ளது. மேலும் இதில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் உறவினரும் சம்பந்தப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஆவணங்களை பரமக்குடி மகளிர் காவல் நிலைய போலீசார் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கி உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT