jkl

Advertisment

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரை அடுத்து கடந்த சில மாதங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இதுவரை தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அதிமுக முன்னணி தலைவர்கள் 5 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீடு உள்ளிட்ட அவருக்குச் சொந்தமான 57 இடங்களில் போலீசார் தீவிர சோதனை செய்து வருகிறார்கள். இதனால் அவர் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்து வருகிறார்கள். இதனால் காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பரான பாப்பிரெட்டிபட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி வீடு மற்றும் அவரது சகோதரர் வீடுகளிலும் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.