Skip to main content

அமைச்சர் மறைவு... காலியான தொகுதியாக 'பாபநாசம்' அறிவிப்பு!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

Papanasam announcement as a vacant constituency

 

கரோனா பாதிப்பால் சிகிச்சைபெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு (72) கடந்த அக்.31 ஆம் தேதி காலமானார். அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர். நேற்று அவரது உடல், அவரது சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவைத் தொடர்ந்து தற்பொழுது உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவையொட்டி அவர் எம்.எல்.ஏவாக இருந்த பாபநாசம் தொகுதி காலியானதாக தற்பொழுது சபாநாயகர் அறிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

பாட்டியை கொலை செய்து பாத்திரத்தில் திணித்த பேத்தி; விசாரணையில் திடுக் தகவல்கள்

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

An argument between granddaughter and grandmother over money; Tragedy in Papanasam

 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை எனும் கிராமம் உள்ளது. இக்கிரமத்தின் கரைமேட்டுத் தெருவில் செல்வமணி என்பவர் வசித்து வந்துள்ளார். கணவனை இழந்த செல்வமணிக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். 

 

செல்வமணியின் மூத்த மகள் கீதா சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்து மாதாமாதம் தாய்க்கு பணம் அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், கீதாவின் மகள் ஜெயலட்சுமி பாட்டி செல்வமணியைக் காணச் சென்றுள்ளார். வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டினுள் சென்றுள்ளார். வீட்டில் பாட்டியைத் தேடிய போது, அவர் வீட்டில் இருந்த பாத்திரத்தில் தலைகீழாகத் திணிக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார். 

 

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்குச் சென்ற பாபநாசம் காவல்துறையினர் உயிரிழந்த செல்வமணி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு ஜெயலட்சுமியின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜெயலட்சுமியை தொடர்ந்து விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 

 

மூத்த மகள் கீதா செல்வமணிக்கு அனுப்பும் பணத்தை கீதாவின் மகள் ஜெயலட்சுமி அடிக்கடி வந்து வாங்கிச் செல்வது வழக்கமாம். சம்பவத்தன்று ஜெயலட்சுமி வந்து பணம் கேட்ட பொழுது செல்வமணி தர மறுத்ததால் அவரை ஜெயலட்சுமி தள்ளிவிட்டுள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செல்வமணியை வீட்டில் இருந்த பெரிய பாத்திரத்தில் தலைகீழாகத் திணித்துள்ளார். தொடர்ந்து வீட்டினை உள்பக்கமாக பூட்டிவிட்டு பின் வாசல் வழியாகச் சென்ற ஜெயலட்சுமி மறுநாள் வழக்கமாக வருவது போல் வந்து கதவினைத் தட்டியுள்ளார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பாட்டியைத் தேடுவது போல் நடித்துள்ளார். இதனையடுத்து ஜெயலட்சுமியை கைது செய்த பாபநாசம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 

பணம் தரவில்லை என்பதற்காக பாட்டியை கொலை செய்து பாத்திரத்தில் அடைத்த பேத்தியின் செயல் அப்பகுதியை பரபரப்பாக்கியுள்ளது.