Advertisment

ஆளுநர் பதவிக்கு லாயக்கற்றவர்: பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - மு.க.ஸ்டாலின்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாநில சுயஉரிமைகளில்தலையிடுவதாகவும், பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் அவர் பெயர் அடிபடுவதாகவும் கூறிதிமுக சார்பில் ராஜ்பவனை முற்றுகையிடும்போராட்டம் இன்று நடைபெற்றது.

Advertisment

stalin

போரட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்அனைவரும் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர். அதை தொடர்ந்து கைது செய்யபட்டவர்கள் இருந்த இடத்திற்கு நேரில்சென்றதிமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மீதான இந்தபோராட்டம்குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஆளுநர்முதல்வர் இருக்கிறார் என்பதையும் மறந்துவிட்டு இங்கு ஏதோ ஜனாதிபதி ஆட்சி நடப்பதை போல அவரே உத்தரவிட்டுள்ளார், இதிலிருந்து அவர் ஆளுநராக இருக்க லாயக்கற்றவர் என்றே தெரியவருகிறது.எனவே அவரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். அவர் பதவி விலகும்வரை அல்லது அவரை பதவியிலிருந்து நீக்கும் வரைஇந்த போராட்டம் தொடரும் எனக்கூறினார்.
Nirmala Devi Governor Panwarilal Purohit protest Stalin DMK
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe