மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் சிறுத்தை ஒன்று நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், நீலகிரி வனத்துறையினர் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்கத்திட்டமிட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு வளாகம் மற்றும் தமிழக விருந்தினர் மாளிகை வளாகங்களில்சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவனத்துறைக்குப்புகார் வந்தது. இதுதொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கடந்த மூன்று நாட்களில் இரவு வேளையில் பலமுறை சிறுத்தையானது நடமாடியது தெரிந்தது. உலா வரும் சிறுத்தையைக் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.