Skip to main content

கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரிந்தது... பண்ருட்டி அருகே பரபரப்பு

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
police

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பெரிய ஏரி. அந்த ஏரிக்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரஹ்மத் நகரை சேர்ந்த முகமது பராக் மகன் சதாம் உசேன் (வயது 33) என்பது தெரியவந்தது. மேலும் இவர் பீகார் மாநிலத்தில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு பண்ருட்டிக்கு வந்துள்ளார் என்றும் தற்போது பண்ருட்டி ஆர்எஸ் சம்சுதீன் பள்ளிவாசலில் இமாமாக பணி செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

 

இவர் கடந்த 13ம் தேதி இரவு முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில்தான் பெரியபட்டு ஏரியில் கொலை செய்யப்பட்டு  கிடந்துள்ளார். இவருக்கு ஷல்பாபானு என்ற மனைவியும், இரு மகன்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.

 

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தை நேரடியாகப் பார்வையிட்டார். திருநாவலூர் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் சதாம் உசேனை கொலை செய்த கொலையாளிகள் யார் என்பதைக் கண்டு பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சதாம் உசேன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை அவரது உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கொலையாளிகளை கைது செய்யாத வரை உடலை வாங்க மாட்டோம் என சதாம் உசேனின் உறவினர்கள் மறுத்துள்ளனர். போலீசார் சமாதான பேச்சு நடத்தியும்  சமரசம் ஏற்படாமல் உடலை வாங்காமல் சென்றுள்ளனர். தற்போது போலீசார் கொலையாளியை நெருங்கி விட்டதாக கூறுகின்றனர் விரைவில் கொலையாளிகள் யார் எதற்காக சதாம் உசேன் கொலை செய்யப்பட்டார் என்ற உண்மைகள் வெளிவரும் என்கிறது போலீஸ் தரப்பில்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்’ - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Former ADMK MLA Seizure of documents at home  Anti Corruption Bureau 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (28.02.2024) காலை 10 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக டெண்டர் விடுவதில் ரூ. 20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

பன்னீர்செல்வம் மற்றும் அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவரும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 10 மணி நேரமாக நடந்து வரும் சோதனையில் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய 47 ஆவணங்கள், விவசாய நிலம் மற்றும் வீட்டு மனை சொத்து ஆவணங்கள் என ரூ. 15 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்து; 2 பேர் பலியான சோகம்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
A subsequent incident; Tragedy with 2 peoples

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிப்காட் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது லாரியின் வேகத்தை டிரைவர் திடீரென குறைத்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் திண்டுக்கல்லில் இருந்து சென்னையை நோக்கி லாரிக்கு பின்னால் வந்த கார் லாரியின் பின்பக்கம் மோதியுள்ளது. இந்த சூழலில் திருச்சியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து காரின் மீது மோதியது.

இதனால் விபத்தில் சிக்கிய பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்து சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இடைக்கல் போலீசார் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லாரி மீது கார் மற்றும் பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் என 2 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.