police

Advertisment

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது பத்திரக்கோட்டை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பிரபல திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான். அவரது சகோதரர் தேவராஜ். தேவராஜ் குடும்பத்தினர் நேற்று முன்தினம் தெற்கு இருப்பு கிராமத்தில் உள்ள தங்கள் உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று உள்ளனர்.

உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சி முடிந்து மறுநாள் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் பீரோவில் இருந்த ஐந்தரை சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் மற்றும் சூட்கேஸில் இருந்த ஒரு லட்சம் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

திருடுபோன பொருட்களின் மதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரம் என தேவராஜ் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் சகோதரர் வீட்டில் திருடுபோனது அப்பகுதி கிராம மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.