கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கம் கிராம தண்டவாளத்தில் ஒரு ஆண், பெண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர்.
தகவலறிந்து போலீசார் விசாரணை செய்ததில், அவர்கள் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்த சுவாதி(18) மற்றும் கோட்லாம்பாக்கத்தை சேர்ந்த மதன்(22) என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் காதலித்து வந்ததாகவும் இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.