Advertisment

"எங்கள்ல ஒருத்தியா இருந்தா... இழந்துட்டோம்!" - முல்லையை நினைத்துக் கண்கலங்கும் இல்லத்தரசிகள்...

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவ்வளவு சீக்கிரம் டிவி தொடர் பார்ப்பவர்களின் மனதில் இருந்து நீங்காது என்கின்றனர் பெண் ரசிகர்கள்.

Advertisment

நான்கு அண்ணன் தம்பிகள் பற்றிய கதைதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். மூத்த அண்ணன் மளிகைக் கடை வைத்திருப்பார். அவருக்கு மூன்று தம்பிகள். இவர்களைச் சுற்றியே இந்தத் தொடர் அமைந்திருக்கும்.

Advertisment

மூத்த அண்ணனுக்குக் குழந்தை இருக்காது, இரண்டாவது அண்ணனுக்குக் குழந்தை இருக்கும். அந்தக் குடும்பத்தில் மூன்றாவது மருமகளாக முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா நடித்திருப்பார்.

முல்லை கதாபாத்திரம் அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தனது கணவர் தன்னிடம் அதிகம் பேசாத நிலையிலும், 'காதல்' 'பாசம்' காட்டி அவரை சிரிக்கவைப்பது போன்று முல்லை கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கதாபாத்திரத்தில் சித்ரா தனது முழு நடிப்புத்திறமையையும் காட்டியிருப்பார். இதனால்தான், முல்லைக்கு அதிக பெண் ரசிகர்கள் கூடினார்கள் என்கின்றனர் டிவி தொடர் பார்ப்பவர்கள்.

மேலும், நாங்கள் இந்தத் தொடரைப் பார்ப்பதைப் பார்த்த எங்கள் கணவர்கள், மகன்கள் என குடும்பமே இந்தத் தொடரைப் பார்க்க ஆரம்பித்தனர். தொடர் பார்க்காத அன்று, இன்னைக்கு முல்லை வந்தாரா?என்ன ஆச்சு? எனக் கேட்பார்கள். அந்த அளவுக்குக் குடும்பமே ஒன்றாகப் பார்ப்போம். எங்க வீட்டு பொன்னாகத்தான் நாங்கள் பார்த்தோம்.

சித்ரா நிச்சயதார்த்தம் ஆன பிறகும், இந்தத் தொடரில் நடித்தார். அது ஹேமந்துக்கு பிடித்ததா பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை. முல்லை கதாபாத்திரத்தில் அதிகம் பேசாத கணவரிடம், காதல் பாசம் காட்டுவார். இது ஹேமந்துக்குப் பிடித்ததா பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை.

cnc

மக்கள் தொலைக்காட்சியில் சித்ரா வரும்போது தூயத் தமிழில் பேசுவார். இதுவே அவரது வளர்ச்சிக்குக் காரணம். சிலம்பம் பயிற்சி உள்ளிட்ட தற்காப்புக் கலைகளைக் கற்றவர், தைரியமான இளம்பெண் என இந்தத் தொடரைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். இந்தத் தொடரில் பிரபலமானவுடன் அவர் அளித்த பேட்டியிலும் அவர் தைரியமான பெண் என்பதை நாம் உணரமுடியும் என்கின்றனர் கண்கலங்கியபடி.

actress chitra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe