Published on 10/06/2021 | Edited on 10/06/2021

சிதம்பரம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் 300 நபர்களுக்கு கரோனா நிவாரண உதவியாக அரிசி, காய்கறிகள் ஆகியவற்றை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் இன்று வழங்கினார். சிதம்பரம் நகராட்சியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், நகராட்சி பொறியாளர் மகாராஜன், மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.எஸ்.என். குமார், தலைமை கழக பேச்சாளர்கள் தில்லை கோபி, நகராட்சி துப்புரவு பணி ஆய்வாளர் பழனிசாமி, வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், மின் பிரிவு கண்காணிப்பாளர் சலீம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.