Advertisment

ஊராட்சி மேம்பாட்டு அலுவலர் பணியிடத்தை உருவாக்க ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கை!!

சிதம்பரத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கும் கூட்டம் நடைபெற்றது. கோவை பகுதியை சார்ந்த ஊராட்சி செயலாலளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். சேலத்தை சேர்ந்த குமரேசன் முன்னிலை வகித்தார். கோவை மாரப்பன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து பரவலாக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் கலந்துகொண்டு ஊராட்சி செயலாளர் பணியிடத்தில் உள்ள பணிசுமைகள் குறித்து பேசினார்கள்.

Advertisment

Panchayat Secretaries request to create Panchayat Development Officer

கூட்டத்தில் ரெங்கராஜன் தலைமையில் செயல்பட்ட ஊராட்சி செயலாளர் சங்கமும், குமரேசன் தலைமையில் செயல்பட்ட சங்கமும் மாநில அளவில் இணைந்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் என செயல்படுவது, ஒரு கோடிக்கு மேல் வருவாய் வரும் ஊராட்சிகளில் ஊராட்சி மேம்பாட்டு அலுவலர் என்ற பணியிடத்தை உருவாக்கி 20 ஆண்டுகள் செம்மையாக ஊராட்சி செயலாளர் பதவி வகித்தவர்களுக்கு வழங்க வேண்டும், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்கபடும் இதர சலுகைகளும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பணியிலிருந்து ஓய்வுபெறும்ஊராட்சி செயலாளர்களுக்கு ரூ10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கத்தின் நிறுவனத்தலைவராக ரெங்ராஜன், மாநில ஒருங்கிணைப்பாளராக குமரேசன், மாநில தலைவராக மாறப்பன், மாநிலபொதுச்செயலாளராக மணிராஜ், மாநில பொருளாளர் இமானுவேல்ராஜன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி, மாநில அமைப்பு செயலாளர் மக்கள் தொடர்பு ஆதிமூலம், மாநில தலைமை நிலைய செயலாளர் தனசேகரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Officer goverment officers panchayat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe