/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4082.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஜெயபுரம் அண்ணா நகரைச்சேர்ந்தவர் ஜெயராமன்(65) விவசாயி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கும் இடையே நில தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை ஜெயராமன் தனது வீட்டின் முன்புள்ள வாழை மரத்தில் பரவியிருந்த கொடியை அறுத்துக் கொண்டு இருந்தபோது, குணசேகரனின் குடும்பத்தைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் ரஞ்சனி ஆகியோர், ஜெயராமனிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போதேஅந்த சண்டை முடிந்துவிட்ட நிலையில், மாலை இச்சம்பவம் தொடர்பாக பணியாண்டப்பள்ளி திமுக ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தரம் அடியாட்களுடன் ஜெயராமன் வீட்டுக்கு வந்து, என் மகளிடமே சண்டையில் ஈடுபடுகிறாயா எனக் கூறி கட்டையால் சரமாரியாக அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனை ஜெயராமன் மகள் ஜெயஸ்விதா ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி. தனது அப்பா மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை செல்போன் மூலம் படம் பிடித்துள்ளார். அதனை திமுக ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தரம் பறித்து அதனை அழித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனையடுத்து மயக்க நிலையில் இருந்த ஜெயராமனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கந்திலி போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், திமுக ஊராட்சி மன்றத்தலைவர் தனது அடியாட்களைக் கொண்டு தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)